அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு – ஜூன் 30 வரை தொடரும்!!

0
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு - ஜூன் 30 வரை தொடரும்!!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு - ஜூன் 30 வரை தொடரும்!!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு – ஜூன் 30 வரை தொடரும்!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவு ஜூன் 30, 2021க்கு பிறகும் தொடரும் என வெளியான தகவலுக்கு தேசிய ஊழியர்கள் சபை செயலாளர் சார்பில் விளக்கம் அளித்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இதனால் அரசுக்கு வரி வசூல் பாதிக்கப்பட்டதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம்- தமிழக அரசு அறிவிப்பு!!

இந்த உத்தரவு ஜூன் 30, 2021 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 30ம் தேதிக்கு பிறகும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என தகவல் வெளியாகியது. தற்போது இதற்கு தேசிய ஊழியர்கள் சபை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், கடந்த ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஜூன் 30ம் தேதிக்கு பிறகும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அமைச்சரவை செயலாளர் கூறியதாக தகவல்கள் வெளியாகியது.

தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 220 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – TRB புது பட்டியல் வெளியீடு!!

இது முற்றிலும் தவறு. அகவிலைப்படி உயர்வை ஜூன் 30, 2021க்கு பிறகும் நிறுத்தி வைப்பது குறித்து அக்கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஜூன் 30க்கு பிறகு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் ஏன் எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here