போப் பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல்.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

0
???? ?????????? ????????? ???????.. ??????????? 3 ??????? ??????? ??????????.. ?????? ???? ????????? ??????? ?????..!!
போப் பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல்.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

போப் பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல்.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக நிமோனியா, சுவாச பிரச்சனை உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகத் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் நேற்று (21-04-2025) காலமானார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் “போப் பிரான்சிஸ் மறைவையொட்டி கத்தோலிக்க திருச்சபையில் அடுத்த 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நாட்களில் கொண்டாட்டம் தொடர்பாக எவ்வித நிகழ்வுகளும் தேவாலயங்களில் நடைபெறாது என்று சாந்தோம் தேவாலய பாதிரியார்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும், முக்கியமான அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!