இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5000/- பெற முடியும்…..திட்டம் குறித்த முழு விவரங்கள் இதோ!
மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒன்றாகும். இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்கள் 60 வயது வரை பணம் செலுத்தி சேமிக்க முடியும்.
இவ்வளவு டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி – உடனே தெரிஞ்சுக்கோங்க!
பயனர்கள் செலுத்தும் தொகையை பொறுத்தே அவர்களது 60 வயதுக்கு பிறகு ரூ.100/- முதல் ரூ.5000/- வரை பென்ஷன் தொகை வழங்கப்படும். அதற்கு வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்கு இருப்பது கட்டாயமானதாகும். இத்திட்டத்தின் கீழ் மாத ரூ.76 அல்லது காலாண்டுக்கு ரூ.226 அல்லது அரை ஆண்டுக்கு ரூ.449 செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























