CEL நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை – 30 காலியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!

0
CEL நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை - 30 காலியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!

Central Electronics Limited-ல் (CEL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் General Manager / Additional General Manager, Additional General Manager, Chief Manager / Sr. Technical Manager போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Central Electronics Limited (CEL)
பணியின் பெயர் General Manager / Additional General Manager, Additional General Manager, Chief Manager / Sr. Technical Manager, Assistant Technical Manager, Deputy Engineer, Purchase Officer, Management Trainee
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

Central Electronics Limited காலியிடங்கள்:

CEL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

General Manager / Additional General Manager – 01 பணியிடம்

Additional General Manager – 01 பணியிடம்

Chief Manager / Sr. Technical Manager – 04 பணியிடங்கள்

Assistant Technical Manager – 01 பணியிடம்

Deputy Engineer – 19 பணியிடங்கள்

Purchase Officer – 03 பணியிடங்கள்

Management Trainee – 01 பணியிடம்

CEL பணிகளுக்கான கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, MBA, BE, B.Tech, ME, MTech, MBA, PGDM, PGP ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

CEL பணிகளுக்கான வயது:

General Manager பணிக்கு 54 வயது எனவும்,

Additional General Manager பணிக்கு 52 வயது எனவும்,

Chief Manager பணிக்கு 48 வயது எனவும்,

Sr. Technical Manager பணிக்கு 42 வயது எனவும்,

Assistant Technical Manager பணிக்கு 35 வயது எனவும்,

Deputy Engineer / Purchase Officer பணிக்கு 30 வயது எனவும்,

Management Trainee பணிக்கு 28 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CEL பணிகளுக்கான மாத ஊதியம்:

இந்த CEL நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.40,000/- முதல் ரூ.2,60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

பான் கார்டில் இருக்கும் தவறை உடனே சரி பண்ணுங்க – முழு விவரம் இதோ!!

CEL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CEL விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.500/-

CEL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த CEL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 01.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!