CBSE OSM Crisis 2026: விடைத்தாள் குளறுபடியைச் சரிசெய்ய களமிறங்கும் IIT நிபுணர்கள்!

0

CBSE “OSM” விடைத்தாள் குளறுபடி: ”
தொழில்நுட்பம் தான் எதிர்காலம்”

என அரசு பிடிவாதம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கொண்டு வந்த புதிய விடைத்தாள் திருத்தும் முறைதான். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, தற்போது மறுமதிப்பீடு (Class 12 Re-evaluation) மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறையில் மாணவர்கள் கடுமையான தொழில்நுட்ப சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். என்ன நடந்தது? நாடே உற்று நோக்கும் “OSM” சர்ச்சை!CBSE இந்த ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்திய On-Screen Marking (OSM) எனப்படும் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு போர்ட்டலில் கடுமையான தொழில்நுட்பக் கோளாறுகள் (Glitches) ஏற்பட்டுள்ளன. விடைத்தாள்களைப் பார்ப்பதற்கும், மறுமதிப்பீட்டிற்குப் பணம் செலுத்துவதற்கும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பலருக்கு மங்கலான விடைத்தாள் பிரதிகள் (Blurred copies) மட்டுமே கிடைத்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மத்திய கல்விஅமைச்சர் Dharmendra Pradhan அதிரடி விளக்கம்

  • பொறுப்பேற்றுக் கொண்ட அரசு:
    “புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்ததில் சில குளறுபடிகள் நடந்துள்ளன, இதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்” என அமைச்சர் தர்மேந்திர பிரதான் The Economic Times நாளிதழில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
  • மறுமதிப்பீட்டு போர்ட்டல் தேதி மாற்றம்:
    மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இணையதள உள்கட்டமைப்பை பலப்படுத்தி, புதிய மாற்றங்களுடன் Class 12 மறுமதிப்பீட்டு போர்ட்டல் ஜூன் 1 முதல் சீராகச் செயல்படும் என்று The New Indian Express தனது செய்திப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
     

நிதி ஆயோக் 2026 அறிக்கை:
டிஜிட்டல் கல்வியில் இருக்கும் கசப்பான உண்மை!

  • டிஜிட்டல் கேப் (Digital Divide):
    சண்டிகர் (95.2%), டெல்லி (75.7%) போன்ற நகரங்களில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளன.
     
  • பின்தங்கிய மாநிலங்கள்:
    ஆனால் மேகாலயா (4.3%),போன்ற மாநிலங்களில் இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான ஸ்மார்ட் கிளாஸ் அல்லது இணையதள வசதிகள் முழுமையாகச் சென்றடையவில்லை என்ற புள்ளிவிவரத்தை NDTV Education வெளியிட்டுள்ளது.
     
    நிதி ஆயோக் 2026 அறிக்கை:
NITI Aayog – School Education Policy Report

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!