அரசு துறைகளில் பட்டியலின காலிப்பணியிடங்கள் குறித்த வழக்கு – தமிழக அரசிற்கு நோட்டீஸ்!!

1
அரசு துறைகளில் பட்டியலின காலிப்பணியிடங்கள் குறித்த வழக்கு - தமிழக அரசிற்கு நோட்டீஸ்!!
அரசு துறைகளில் பட்டியலின காலிப்பணியிடங்கள் குறித்த வழக்கு - தமிழக அரசிற்கு நோட்டீஸ்!!
அரசு துறைகளில் பட்டியலின காலிப்பணியிடங்கள் குறித்த வழக்கு – தமிழக அரசிற்கு நோட்டீஸ்!!

தமிழக அரசு சார்பாக தேசிய நெடுஞ்சாலை துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

தமிழக அரசிற்கு உத்தரவு:

தமிழக அரசு சார்பாக நெடுஞ்சாலை துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு குறித்து எஸ்.சி, எஸ்.டி பணியாளர்கள் நலச்சங்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “தமிழக அரசு சார்பாக உயர்நிலை குழு ஒன்று தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள எஸ்.சி, எஸ்.டி பின்னடைவு காலிப்பணியிடங்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

பட்டப்படிப்பு தேவையில்லை! கூகிள், ஆப்பிள் நிறுவனங்களில் வேலை – ஆய்வில் தகவல்!!

இதன்படி எஸ்.சி பிரிவினருக்கு 1234 மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 614 பணியிடங்கள் என மொத்தம் 1848 காலியிடங்கள் தமிழக அரசு துறைகளில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதில் நெடுஞ்சாலை துறையில் மட்டும் 166 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தனர். மாநில நெடுஞ்சாலை துறை இயக்குனர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில் இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

TNPSC குரூப்-4 பாடத்திட்டம் வெளியீடு எப்போது?? தேர்வர்கள் கோரிக்கை!!

ஆனால் இந்த பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் உள்ளிட்ட பின்னடைவு காலியிடங்களை நிரப்ப வேண்டும்”,என அந்த மனுவில் குறிப்பிட்டார். அந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை ஜனவரி 6-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Velaivaippu Seithigal 2021

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!