பட்டப்படிப்பு தேவையில்லை! கூகிள், ஆப்பிள் நிறுவனங்களில் வேலை – ஆய்வில் தகவல்!!

0
பட்டப்படிப்பு தேவையில்லை! கூகிள், ஆப்பிள் நிறுவனங்களில் வேலை - ஆய்வில் தகவல்!!
பட்டப்படிப்பு தேவையில்லை! கூகிள், ஆப்பிள் நிறுவனங்களில் வேலை - ஆய்வில் தகவல்!!
பட்டப்படிப்பு தேவையில்லை! கூகிள், ஆப்பிள் நிறுவனங்களில் வேலை – ஆய்வில் தகவல்!!

ஆப்பிள், கூகிள், நெட்பிளிக்ஸ், சீமென்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணி செய்வதற்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு தேவையில்லை பதிலுக்கு திறமை ஒன்றே போதும், என்று தனியார் நிறுவன ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

திறமைக்கு வேலை:

கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் வேலையிழக்கும் சூழ்நிலை வந்துள்ளது. பல இளைஞர்கள் அரசு வேளைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், சிலர் தனியார் நிறுவனங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆப்பிள், கூகிள், நெட்பிளிக்ஸ், சீமென்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்களில் பணிபுரிய பலர் போட்டி போட்டுக்கொண்டு உள்ளனர்.

TNPSC குரூப்-4 பாடத்திட்டம் வெளியீடு எப்போது?? தேர்வர்கள் கோரிக்கை!!

ஆனால் படிப்பிற்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாத நிலை இனிமேல் வர உள்ளது. இதன்படி கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்த 50% வேலையாட்கள் அனைவரும் பட்டப்படிப்பை முடிக்காதவர்கள் என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்களில் தேவையான திறனை கல்லூரிகள் கற்றுத் தருவதில்லை என ஆப்பிள் சிஇஓ டிம்குக் கூறியுள்ளார்.

குடியரசு தினவிழா அணிவகுப்பு பாராட்டு – 12 தமிழக மாணவர்கள் தேர்வு!!

எலக்ட்ரானிக் டெக்னீசியன், மெக்கானிக்கல் டிசைனர், மார்கெட்டிங் வேலை செய்பவர்களில் பலர் அந்த துறைகளில் பயின்றவர்கள் இல்லை என்று தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. ஒரு சில நிறுவனத்தார்கள் மதிப்பெண்னை விட திறமையை பார்க்கிறார்கள், என்பது அதற்கு சான்றாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!