பல ஆண்டு கால காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு – அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

0
பல ஆண்டு கால காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு - அரசு வெளியிட்ட குட் நியூஸ்!
பல ஆண்டு கால காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு - அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

பல ஆண்டு கால காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு – அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

கனடாவில் குடியேற வேண்டும் என்ற ஆசையுடன் பல ஆண்டுகளாக காத்திருந்தவர்களுக்கு தற்போது மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அரசின் அனுமதி:

அயல்நாடுகளில் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற கனவுடன் பல இளைஞர்களும் தற்போது காத்திருக்கின்றனர். ஆனால் கொரோனாவிற்கு பிறகான நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அயல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கள் நாடுகளில் குடியேருவதால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு பல முக்கிய நாடுகள் அந்நிய நாட்டுவர்களுக்கான குடியுரிமையை மறுத்து வருகிறது.

ஆனால் கனடா அரசு தற்போது புலம் பெயர்பவர்களுக்காக சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி கனடாவில் பிறப்பு விகிதமானது நாளுக்கு நாள் குறைந்து வருவதால் அங்குள்ள மக்கள் தொகையை சீர்செய்யும் விதமாக அயல் நாட்டவர்களை தங்கள் நாட்டில் குடியமர்த்த புலம் பெயர்தல் துறை முடிவு செய்துள்ளது. மேலும் கனடாவில் உள்ள தொழில்துறைகளில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் அயல்நாடுகளில் இருந்து அதிக அளவிலான ஊழியர்கள் தேவைப்படுவதால் அரசு இத்தகைய முடிவை எடுத்து உள்ளது.. இந்த விவரங்களை புலம்பெயர்தல் துறை அமைச்சர் sean fraser தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டின் முன்னாள் அரசு துறை அதிகாரி ஒருவர் கூறும் போது புலம் பெயர்ந்தவர்கள் நாட்டில் அதிக அளவில் குடியேறும் பட்சத்தில் நாட்டில் மருத்துவ மற்றும் குடியிருப்பு இடங்களுக்கான தேவை அதிகரிக்கும். ஆனால் அரசு அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் நாட்டில் ஒரு சில பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்து உள்ளார்

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!