Bharti Airtel Scholarship 2026–27 – Engineering & Technology மாணவர்களுக்கு சிறந்த Scholarship வாய்ப்பு!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் (Bharti Airtel), நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், கல்வியில் சிறந்து விளங்கும் எஞ்சினியரிங் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான பிரத்யேக Bharti Airtel Scholarship 2026–27 திட்டத்தை அறிவித்துள்ளது.டாப்-டயர் பொறியியல் கல்லூரிகள், ஐஐடி (IITs) மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் (NITs) அதிநவீன தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்கள் இந்த 100% நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
திட்டத்தின் சுருக்கம்
-
- தகுதியான படிப்புகள்:
B.E / B.Tech (Computer Science, AI, Data Science, Electronics & Tech). - உதவித்தொகை பலன்கள்:
100% கல்லூரி கல்வித் கட்டணம் (Full Tuition Fee) மற்றும் விடுதிக் (Hostel) கட்டணங்கள் முழுமையாக ஏற்கப்படும். - முக்கிய தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் மெரிட் அடிப்படையில் முதலாமாண்டு சேர்ந்திருக்க வேண்டும். - முக்கிய அம்சம்:
மாணவிகள் மற்றும் நலிவடைந்த பின்னணி கொண்ட மாணவர்களுக்குப் முன்னுரிமை வழங்கப்படும்.
- தகுதியான படிப்புகள்:
ஏர்டெல் ஸ்காலர்ஷிப்பின் முக்கிய நோக்கம்:
இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI), தரவு அறிவியல் (Data Science) போன்ற படிப்புகளுக்கான கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. திறமையான மாணவர்கள் நிதியுதவி இல்லாத காரணத்தால் இந்த வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்பதற்காக, ஏர்டெல் நிறுவனம் இவர்களது ஒட்டுமொத்தப் படிப்பிற்கான செலவையும் தங்களது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதி மூலம் வழங்குகிறது.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஏர்டெல் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ சேர்க்கைப் பக்கத்திற்குச் சென்று தங்களது ஜேஇஇ (JEE Rank) மதிப்பெண்கள், கல்லூரி சேர்க்கை ஆணை (Allotment Order) மற்றும் குடும்ப வருமான விபரங்களைச் சமர்ப்பித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

























