லட்சுமியை வீட்டிற்கு அழைத்து வரும் பாரதி, தேடி வரும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

1
லட்சுமியை வீட்டிற்கு அழைத்து வரும் பாரதி, தேடி வரும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
லட்சுமியை வீட்டிற்கு அழைத்து வரும் பாரதி, தேடி வரும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
லட்சுமியை வீட்டிற்கு அழைத்து வரும் பாரதி, தேடி வரும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி கண்ணம்மாவின் மகள் தான் என்று பாரதி தெரிந்துக் கொள்கிறார். பின்னர் லட்சுமியை தூக்கிக் கொண்டு அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கே கண்ணம்மாவை வர வைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமிக்கு உடம்பு சரி இல்லை என அவரது பெற்றோரிடம் தெரிவிக்க அவரது டைரியை பார்க்கிறார் பாரதி. அதில் கண்ணம்மா தான் அவரது அம்மா என புகைப்படம் இருக்கிறது. அதை பார்த்து பாரதி அதிர்ச்சி அடைகிறார். உண்மையை தெரிந்துக் கொண்ட பாரதி லட்சுமி தனது அம்மா பெயர் பற்றி பல தடவை பொய் சொன்னதை நினைத்து கோபப்படுகிறார்.

ஸ்கூல் சேர்க்கும் போது என் அப்பா பெயர் பாரதி என்று சொன்னதை நினைத்தும் கோவத்தின் உச்சியில் இருக்கிறார். கண்ணம்மாவை சும்மா விட கூடாது என்று, மருத்துவமனை உதவியுடன், கண்ணம்மாவை மருத்துவமனைக்கு வர வைக்கிறார். மருத்துவமனையில் இருக்கு கண்ணம்மாவிற்கு போன் செய்து லட்சுமிக்கு உடம்பு சரி இல்லை என்று சொல்கின்றனர்.

தமிழ்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,933 பேருக்கு கொரோனா – 21 மாவட்டங்களில் புதிய பலி இல்லை!

உடனே கண்ணம்மா கிளம்பி வருகிறார். ஆனால் பாரதி டாக்டரிடம் சொல்லிவிட்டு லட்சுமியை கூட்டிக் கொண்டு அவரது வீட்டிற்கு தூக்கி செல்கிறார். கண்ணம்மா மருத்துவமனை வர அங்கே லட்சுமியை தூக்கிக் கொண்டு பாரதி அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று தெரிவிக்கின்றனர். எதோ தப்பாக உள்ளது என நினைத்து கண்ணம்மா ஆட்டோவில் பாரதி வீட்டிற்கு கிளம்புகிறாள்.

அங்கே அஞ்சலிக்கு உடம்பு சரி இல்லை என்பதால் அவரை பார்க்க அவரது அம்மா அப்பா வந்துள்ளனர். வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து ஏன் இதனை நாள் வரவில்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாரதி குழந்தையை தூக்கிக் கொண்டு வருகிறார். அதை பார்த்து அனைவரும் ஹேமாவை ஏன் கூட்டிட்டு வந்த என்று கேள்வி கேட்கின்றனர்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் STR – ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ பாணியிலான வைரல் புகைப்படம்!

பாரதி எதுவும் பேசாமல் அவரது ரூமிற்கு சென்று படுக்க வைக்கிறார். அப்போது அது லட்சுமி என தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். லட்சுமிக்கு என்னாச்சு என்று சௌந்தர்யா கேட்க அவளுக்கு வயிற்று வலி அதான் மருத்துவமனைக்கு கூட்டி சென்று சிகிச்சை கொடுத்தேன். இப்போ எல்லாம் சரி ஆயிடுச்சு என்று சொல்கிறார். அப்போ அவங்க வீட்டிற்கு அனுப்பாம இங்கே ஏன் கூட்டிட்டு வந்த என்று கேட்க. லட்சுமி அம்மா யார் என்று தெரிந்துக் கொள்ள கூட்டிக் கொண்டு வந்தேன் என்று சொல்கிறார். அதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். கண்ணம்மா எதோ தவறாக நடக்க உள்ளதாக நினைத்து ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“பாக்கியலட்சுமி” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!