‘முதன் முறையாக என்னை நான் உணர்ந்து கொண்ட தருணம் ‘ – மனம் திறந்த ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி!

0
'முதன் முறையாக என்னை நான் உணர்ந்து கொண்ட தருணம் ' - மனம் திறந்த 'பாரதி கண்ணம்மா' நடிகை ரோஷினி!
'முதன் முறையாக என்னை நான் உணர்ந்து கொண்ட தருணம் ' - மனம் திறந்த 'பாரதி கண்ணம்மா' நடிகை ரோஷினி!
‘முதன் முறையாக என்னை நான் உணர்ந்து கொண்ட தருணம் ‘ – மனம் திறந்த ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி!

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினிக்கு சின்னத்திரை வாய்ப்பு கிட்டும் முன்னதாக, தனக்கிருந்த தாழ்வு மனப்பான்மை, நிற வேறுபாடு மற்றும் அதனை மீண்டு வந்த சில தருணங்களை குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

நடிகை ரோஷினி

பொதுவாக சினிமா துறையில் அழகு என்று பார்க்கப்படுவது பெரும்பாலும் நிறமாக தான் இருக்கும். ஏனென்றால் நல்ல வெளிர் நிறமாக இருக்கும் பெண்கள் தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் காலம் காலமாக பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. சின்னத்திரையும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த இந்த ‘நிறம்’ என்கிற முறையை மாற்றி மற்ற பெண்களாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என கூறி, அதனை செயல்படுத்தியவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி.

பறிபோன சீரியல் வாய்ப்பு, போராடி வென்ற “கண்ணான கண்ணே” நிமிஷிகா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தற்போது தமிழக மக்களின் இதயங்களில் ஆஸ்தான நாயகியாக மாறி இருக்கும் இவரது சினிமாவுக்கு முந்தய வாழ்க்கை ஒரு சராசரி பெண்ணை போல இருந்ததாக நடிகை ரோஷினி ஹரிப்ரியன் கூறியுள்ளார். வழக்கமாக கருப்பாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தோன்றக்கூடிய நிற வேறுபாடு, தாழ்வு மனப்பான்மை அனைத்தும் நடிகை ரோஷினிக்கும் இருந்திருக்கிறதாம். குறிப்பாக அணியும் உடைகள் எல்லாம் பொருத்தமில்லாமல் இருப்பதாக நினைப்பது, வாய் திறந்து சிரிப்பது என எல்லாவற்றிற்கும் ஒரு முட்டுக்கட்டை போட்டு வைத்திருக்கிறார் இவர்.

இப்படி பல நாட்களை கடந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் சுய தொழில் செய்ய முயற்சி செய்து வந்த ரோஷினி, தான் கைப்பட தயாரித்த காதணிகளை விற்பனை செய்வதற்காக அவற்றை தானே அணிந்து கொண்டு புகைப்படங்களை எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்திருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவுமே, தன்னை தானே அழகுபடுத்திக்கொள்ள மெனக்கெட்டிருக்கிறார் ரோஷினி. அந்த வகையில் வித்தியாசமான சிகை அலங்காரம், முகப்பூச்சு, கண்களுக்கு மை பூசுவது என செய்து தான் அழகாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறார்.

சந்தியாவை பழிவாங்க நினைக்கும் சல்மா, சரவணனுக்கு தெரியாமல் குடும்பத்தை வரவழைக்க திட்டம் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

இதற்கு பின்பாக தான் வாயை திறந்து சிரிக்கவும் கற்று கொண்டிருக்கிறார் இவர். இந்த தன்னம்பிக்கை தனக்குள் பெருகியதும் நிறம் என்பது எதற்கும் தடை இல்லை என்பதை உணர்ந்து கொண்டு பழைய எண்ணங்களை வெளியே வந்திருக்கிறார். அந்த வகையில், ‘கருப்பு என்பது ஒரு குறை இல்லை. அது வெறும் நிறம் மட்டுமே என்கிற மனப்பான்மையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாற்றம் நம்மிடம் இருந்து தான் உருவாக வேண்டும். இந்த மாற்றத்தை நாம் தான் துவங்கி வைக்க வேண்டும்’ என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் நடிகை ரோஷினி.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here