பாரதி, வெண்பா திருமண உண்மையை அறிந்து கொண்ட கண்ணம்மா – அஞ்சலி ‘நச்’ பதிலடி!
விஜய் டிவியில் டாப் சீரியலான “பாரதி கண்ணம்மா”வின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா ப்ரோமோ
விஜய் தொலைக்காட்சியில் தற்போது லேட்டஸ்டாக அனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கும் சீரியல் தான், “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இன்று வரை இருந்து வருகின்றது. தற்போது இந்த சீரியலில் லட்சுமி கண்ணம்மாவின் குழந்தை என்று பாரதிக்கு தெரிந்து விடுகிறது. இதனால் அவர் கண்ணம்மா மேல் மிகவும் கோபமாக இருக்கிறார். இதனை அடுத்து அனைவரும் மகிழ்ச்சியாக அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் அஞ்சலி தான் குழந்தை பிறந்தவுடன் இறந்து விடுவோமே என்று நினைத்து கவலையில் இருக்கிறார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகர் சித்தார்த் சுக்லா திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இருந்தும் அதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அஞ்சலியின் சீமந்த விழா நடக்கிறது. இந்த விழாவில் கண்ணம்மாவும் அவரது மகள் லட்சுமியும் கலந்து கொள்கின்றனர். இதனை பாரதி வெறுக்கிறார் என்று அனைவரும் உணர்கின்றனர். அதே போல் வேணு மற்றும் சௌந்தர்யா இருவரும் எங்கே தங்களிடம் கண்ணம்மா இரட்டை குழந்தை பற்றி கேட்டு விடுவாரோ என்று பயப்படுகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
பின்னர், அஞ்சலி பாரதியை கூப்பிட்டு தன்னை ஆசிர்வாதம் செய்ய சொல்லி கூறுகிறார். அப்போது அவருடன் வெண்பாவும் சேர்ந்து வருகிறார். இதனை பார்க்கும் வேணு, சௌந்தர்யா மற்றும் அஞ்சலி யாருக்குமே பிடிக்கவில்லை. இதனால் அஞ்சலி தனது அம்மாவிடம் திருமணம் முடியாதவர்கள் ஆசிர்வாதம் செய்ய கூடாது, இல்லையா? என்று கேட்கிறார். அவரது அம்மாவும் ஆமாம் என்று கூறியதும், வெண்பாவை தனக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டாம் என்று கூற சொல்கிறார். இதனை கேட்கும் கண்ணம்மா குழப்பம் அடைந்து விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.