தாலியை கழட்டி கோபியின் முகத்தில் விட்டெறிந்த பாக்கியா – அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

0
தாலியை கழட்டி கோபியின் முகத்தில் விட்டெறிந்த பாக்கியா - அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
தாலியை கழட்டி கோபியின் முகத்தில் விட்டெறிந்த பாக்கியா - அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
தாலியை கழட்டி கோபியின் முகத்தில் விட்டெறிந்த பாக்கியா – அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை பல நாட்களுக்கு பிறகு தற்போதுதான் பாக்கியாவிற்கு தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் தாலியை கழட்டி கோபியின் முகத்தில் பாக்கியா விட்டெறிபடியும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பதுதான் ரசிகர்கள் பலரின் யோசனையாக இருந்து வருகிறது. கோபி இது போல தனது நெருங்கிய தோழியிடம் தொடர்பு வைத்துக் கொள்வார் என பாக்கியா ஒருநாளும் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் சில நாட்களாக பாக்கியாவிற்கும் கோபியின் மீது ஒரு சிறிய சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் அது இவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை.

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் திடீர் திருப்பம் – இரட்டை வேடங்களில் மிரட்டும் நாயகி!

அவ்வப்போது செல்வி கோபியை பற்றி கூறும் போதெல்லாம் கண்டிப்பாக அது மாதிரி எல்லாம் கோபி செய்யவே மாட்டார் என கோபிக்கு ஆதரவாக தான் இருந்து வந்தார். ஆனால், அவ்வப்போது பாக்கியாவிடம் கோபி உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கூறுவதை மட்டும் பாக்கியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எதற்காக இவர் இப்படியே கூறி கொண்டிருக்கிறார் என யோசித்துக் கொண்டே இருந்தார். ஆனால், தற்போதுதான் பாக்கியாவிற்கு அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதுவும் பாக்கியா தனது கண்ணால் பார்த்ததால் மட்டுமே கோபியின் உண்மையான முகம் தெரிய வந்திருக்கிறது. வேறு யாராவது கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருக்கிறது எனக் கூறியிருந்தால் கண்டிப்பாக அதை பாக்கியா நம்பி இருக்கவே மாட்டார். பாக்கியாவை போல ஈஸ்வரியும் கோபியின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். கோபியின் முகத்திரையை கிழித்த பிறகும் கூட கோபி இந்த மாதிரியெல்லாம் செய்திருக்க மாட்டார் என கூறுகிறார். பின்பு எழிலும் அப்பாவிற்கும் வேறொரு பெண்ணிற்கும் தொடர்பு இருக்கிறது. எனக்கு ஆரம்பத்திலேயே இது பற்றி தெரியும். அம்மாவிற்காக மட்டுமே அமைதியாக இருந்தேன் என முழு உண்மையையும் கூறுகிறார். இதற்குப் பிறகும் கோபியுடன் சேர்ந்து வாழ வேண்டாம் என நினைத்து பாக்கியா தாலியை கழட்டி கோபியின் மீது வீசி விட்டு செல்வது போன்ற அதிரடி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!