சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் திடீர் திருப்பம் – இரட்டை வேடங்களில் மிரட்டும் நாயகி!

0
சன் டிவி 'ரோஜா' சீரியலில் திடீர் திருப்பம் - இரட்டை வேடங்களில் மிரட்டும் நாயகி!
சன் டிவி 'ரோஜா' சீரியலில் திடீர் திருப்பம் - இரட்டை வேடங்களில் மிரட்டும் நாயகி!
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் திடீர் திருப்பம் – இரட்டை வேடங்களில் மிரட்டும் நாயகி!

சன் டிவியின் ‘ரோஜா’ சீரியலில் கதைநாயகியாக நடித்து வரும் நடிகை ப்ரியங்கா நல்காரி அடுத்து வரும் கதைக்களங்களில் இரட்டை வேடங்களில் களமிறங்க இருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

ப்ரியங்கா நல்காரி

சன் டிவியில் சுமார் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ஒரு சூப்பர் ஹிட் சீரியல் ‘ரோஜா’. சின்னத்திரையில், வெள்ளித்திரைக்கு இணையாக ஆக்ஷன், ரொமான்ஸ், திகில் உள்ளிட்ட காட்சிகளுடன் கலக்கி கொண்டிருக்கும் இந்த ‘ரோஜா’ சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தவிர இந்த சீரியலில் பல முன்னணி சீரியல் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் நடித்து வருவதால் இது சன் டிவியின் டாப் சீரியல் லிஸ்டில் இடம்பிடித்து வருகிறது. பொதுவாக, சீரியல் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருப்பது வழக்கமான ஒன்று தான்.

கண்ணம்மாவை முழு மனதுடன் ஏற்று கொள்ளும் பாரதி – புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!

ஏனென்றால் சீரியல் கதைகள் அப்படி இருக்கும் போது மட்டும் அவை பார்வையாளர்களை கவரும் என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும். அந்த வகையில் சன் டிவியின் ‘ரோஜா’ சீரியலிலும் தற்போது எதிர்பார்த்திராத ஒரு திருப்பம் நடந்தேறியிருக்கிறது. அதாவது, இந்த சீரியலின் முதன்மை கதாபாத்திரமான ரோஜா இனி வரும் கதைக்களத்தில் இரட்டை வேடங்களில் காட்டப்பட உள்ளது. இதுவரை இந்த சீரியலின் கதைக்களத்தில் ரோஜா கடலுக்குள் விழுந்தது தெரியாமல் அர்ஜுன் அவரை தேடிக்கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் ரோஜா காணாமல் போன விஷயத்தை எப்படி வீட்டில் இருந்து மறைப்பது என அர்ஜுன் யோசிக்கும் போது அவருக்கு ரோஜாவை போல இருக்கும் ஜெஸிகா என்பவரது அறிமுகம் கிடைக்கிறது. இப்போது ஜெஸிகாவை ரோஜாவாக நடிக்க வைக்க அர்ஜுன் முடிவு செய்கிறார். மறுபக்கத்தில் கடலில் விழும் ரோஜா ஒரு சிலரால் காப்பாற்றப்படுவது போல இந்த சீரியலின் கதைக்களம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘ரோஜா’ சீரியல் இனி ரோஜா மற்றும் ஜெஸிகா என இரண்டு கதாப்பாத்திரங்களுடன் நகர இருப்பதால் நடிகை ப்ரியங்கா நல்காரி இனி இரட்டை வேடங்களில் அசத்த இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here