BRO நிறுவனத்தில் வேலை – 870+ காலிப்பணியிடங்கள் || 10 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
BRO நிறுவனத்தில் வேலை - 870+ காலிப்பணியிடங்கள் || 10 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
BRO நிறுவனத்தில் வேலை - 870+ காலிப்பணியிடங்கள் || 10 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
BRO நிறுவனத்தில் வேலை – 870+ காலிப்பணியிடங்கள் || 10 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பானது (BRO) வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Store Keeper Technical, Multi Skilled Worker ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (11.07.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

BRO வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியான அறிவிப்பில், எல்லை சாலைகள் அமைப்பில் Store Keeper Technical பணிக்கு என 377 பணியிடங்களும், Multi Skilled Worker (Driver Engine Static) பணிக்கு என 499 பணியிடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Store Keeper Technical பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது Class II Course for Store man Technical தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Multi Skilled Worker (Driver Engine Static) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது Mechanic Motor / Vehicles / Tractors ஆகிய துறைகளில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • Store Keeper Technical பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட Stores Establishment துறையில் 03 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Store Keeper Technical பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை எனவும், MSW (Driver Engine Static) பணிக்கு 18 வயது முதல் 25 வரை எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.
  • Store Keeper Technical பணிக்கு குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை என்றும், Multi Skilled Worker (Driver Engine Static) பணிக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை என்றும் மாத சம்பளமாக தரப்படும்.

TN’s Best Coaching Center

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PET, Practical Test, Written Test மற்றும் Primary Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BRO விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (11.07.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

BRO Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!