
மயூராவுடன் துபாய் செல்ல திட்டமிடும் ராதிகா, பார்க்க வரும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை ஏற்றுக் கொள்ளாமல் ராதிகா பிடிவாதமாக இருக்கிறார். ராதிகாவின் அண்ணன் அம்மா என அனைவரும் சொல்லியும் கேட்காமல் ராதிகா பெரிய முடிவை எடுத்து இருக்கிறார். அதாவது அவர் மயூராவை அழைத்து கொண்டு துபாய் கிளம்ப இருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது சோகமாக நிலைமையில் கதை சென்று கொண்டிருக்கிறது. கோபி தான் பாக்கியாவின் கணவர் என உண்மை தெரிந்த பின் ராதிகா கோபியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ஆனால் ராதிகாவின் அம்மா அண்ணன் பல விதங்களில் பேசி ராதிகாவின் மனதை மாற்ற நினைக்கின்றனர். ஆனால் ராதிகா தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். பாக்கியாவும் தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்ய சொல்லி சொல்கிறார்.
கோபியை திருமணம் செய்து கொள்வேன் என போலீசிடம் ராதிகா எழுதி கொடுத்ததை காரணமாக வைத்து ராதிகாவின் அண்ணன் கோபியை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார். கோபியும் நான் ராதிகாவை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என சொல்ல அதனால் ராதிகா மனதை மாற்ற நினைக்கிறார்கள். அதனால் ராதிகா பெரிய முடிவு ஒன்றை எடுக்க நினைக்கிறார். இங்கே இருந்தால் தான் பிரச்சனை என்பதால் மயூரவுடம் துபாய் செல்ல முடிவு செய்கிறார்.
தமிழகத்தில் 38 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி ரத்து – கூட்டுறவுத்துறை உத்தரவு!
ராதிகாவின் அம்மா மயூராவின் படிப்பு வீணாகிவிடும் என சொல்லியும் கூட, மயூராவிற்காக தான் இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன் என ராதிகா உறுதியாக சொல்கிறார். இது பற்றி பாக்கியாவிடமும் ராதிகா பேசிடுகிறார். இனி வரும் எபிசோடுகளில் ராதிகாவும் மயூராவும் துபாய் கிளம்பி இருக்க அப்போது அவர்களை பார்க்க கோபி வருகிறார். கோபி போகவிடாமல் அவர்களை தடுக்க ஆனால் ராதிகா கிளம்புவரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.