ஐலா பாப்பாவிற்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்த ஆலியா சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

0
ஐலா பாப்பாவிற்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்த ஆலியா சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பாவிற்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்த ஆலியா சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோடியாக சஞ்சீவ் ஆலியாவின் மகள் ஐலா பாப்பா தற்போது ஸ்கூல் சென்று வரும் நிலையில், அவள் ஸ்கூலிற்கு செல்ல சஞ்சீவ் சைக்கிள் வாங்கி கொடுத்து இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

சஞ்சீவ் ஆலியா:

நடிகை ஆலியா சீரியலை விட்டு விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தற்போது ஆக்டிவாக இருக்கிறார். அவர் தன்னுடைய குழந்தைகளுடன் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். ஆலியா மானசா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் தற்போது சீரியலை விட்டு விலகி முழுக்க முழுக்க யூடுயூப் பக்கம் ஆர்வம் செலுத்தி வருகிறார். தன்னுடைய மகன் அர்ஷ் முகத்தை காட்டாமல் இருக்கும் நிலையில் முதல் குழந்தை ஐலா உடன் ஏகப்பட்ட வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஐலா பாப்பா முதல் நாள் பள்ளிக்கு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஐலா செம அழகாக இருந்ததாக பலர் கமெண்ட் செய்து இருந்தனர். மேலும் முதல் நாள் என்பதால் ஐலா அழ அதை பார்த்து ஆலியாவும் வருத்தப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து ஐலாவிற்கு தற்போது சைக்கிள் வாங்கி கொடுத்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஐலா பள்ளிக்கு செல்ல சைக்கிள் வேண்டும் என ஆலியா சொல்ல சஞ்சீவ் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

மயூராவுடன் துபாய் செல்ல திட்டமிடும் ராதிகா, பார்க்க வரும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!

பின் அனைவரும் குடும்பத்துடன் கடைக்கு சென்று ஐலாவிற்கு பிடித்தது போல சைக்கிள் வாங்கி கொடுக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. புது சைக்கிள் வாங்கி கொடுத்த சந்தோஷத்தில் ஐலா பாப்பா இருக்க அதில் அவருடைய ஆக்சன்களை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். பின் வீட்டிற்கு சென்று மொட்டை மாடியில் ஐலா பாப்பா அழகாக சைக்கிள் ஓட்ட ஆலியா அவருக்கு உதவி செய்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!