அரசு சார்பில் 5 லட்சம் வரை இலவச மருத்துவம் – யாருக்கெல்லாம் இது கிடைக்கும் தெரியுமா?

0

அரசு சார்பில் 5 லட்சம் வரை இலவச மருத்துவம் – யாருக்கெல்லாம் இது கிடைக்கும் தெரியுமா?

மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது. இது மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக லாபம் தரும் வங்கிகள் – இவ்ளோ இருக்குனு உங்களுக்கு தெரியுமா?

தினக்கூலி தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தனிநபர்கள் ABY திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) விண்ணப்பிக்க முடியும். ஊனமுற்ற நபர்கள் அல்லது ஊனமுற்ற குடும்ப உறுப்பினரைக் கொண்டவர்கள் மற்றும் பழங்குடியினர் அல்லது ஆதரவற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இச்சலுகையை பெற முடியும். நீங்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியானவர் என்பதை தெரிந்து கொள்ள 14555 என்ற இலவச என்னை தொடர்பு கொள்ளலாம்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!