
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்போது இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க.. அப்புறம் உங்க முதலீட்டுக்கு ஆபத்து உறுதி..
முதலீட்டாளர் தனது நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். மேலும், ஒரு முதலீட்டாளர் SIP திட்டத்தில் சிறிய தொகையை முதலீடு செய்தால், அது காலப்போக்கில் அதிக வருமானத்தை திரும்ப பெற உதவுகிறது. இந்நிலையில் SIP திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய உத்திகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
அதாவது பல முதலீட்டாளர்கள் வளர்ச்சி திட்டத்தை விட டிவிடெண்ட்டைய மற்றும் குறைந்த நிகர சொத்துக்கள் (NAV) குறைந்த விலை கொண்டுள்ளதால் அதை தேர்வு செய்கிறார்கள். இதனால் அத்திட்டத்தின் மதிப்பு குறைய தொடங்கி இறுதியாக வலுவிழக்கிறது இதற்கு பதிலாக டெபிட் பண்டுகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம். மேலும், சந்தை வீழ்ச்சியின் போது முதலீட்டாளர்கள் பண்டின் சமீபத்திய செயல்திறன் அடிப்படையில் முதலீடு செய்வதை தவிர்த்து திட்டத்தின் வரலாறு மற்றும் உங்கள் இலக்குகளுக்கு ஏற்றவையா என்று ஆய்வு மேற்கொண்டு அல்லது நிதி நிபுணர்களை அணுகி முதலீடு செய்வது உங்களுக்கு பயனளிக்கும்.


























