திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் மாத நிகழ்வுகள்!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் மாத நிகழ்வுகள்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் மாத நிகழ்வுகள்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் மாத நிகழ்வுகள்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் ஏழுமலையான் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடைபெறும் முக்கியமான சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தி வந்ததால், இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம், அதிக மக்கள் கூடும் பொது இடங்களில் தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரித்தது. இதனால் மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்து இடங்களுக்கும் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதில் ஏராளமானோர் பாதயாத்திரையாக மலை ஏறி நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர்.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விடுமுறை தினங்களில் பொருட்கள் அனுப்ப தடை!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பரவல் கணிசமாக குறைந்து விட்டதால் பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தானம் படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது. சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்பவர்கள் வசதிக்காக சென்னை- திருப்பதி இடையே விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். மேலும் ஏப்ரல் மாதத்திற்கான ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல் 27ம் தேதியைத் தவிர மற்ற அனைத்து நாட்களும் நிரம்பியுள்ள நிலையில், தற்போது 2022 மே மாதத்திற்கான கட்டண தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மின் கட்டணம் 2.68% உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி! ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!

அதன்படி, ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்டுகளை 21ம் தேதியும், மே மாதத்திற்கான டிக்கெட்டுகளை 22ம் தேதியும், ஜூன் மாதத்திற்கான டிக்கெட்டுகளை 23ம் தேதியும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த (ஏப்ரல்) மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 2-ந்தேதி ஸ்ரீ சுபக்ருத் நாம வருடாந்திர உகாதி, உகாதி ஆஸ்தானம், 3-ந்தேதி மத்ஸ்ய ஜெயந்தி, 10-ந் தேதி ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 12-ந்தேதி சர்வ ஏகாதசி, 14-ந் தேதி முதல் 16ம் தேதி வரை வசந்த உற்சவம், 26-ந் தேதி ஸ்ரீ பாஷாய கார்லா உற்சவ ஆரம்பம், 29-ந் தேதி மாத சிவராத்திரி, 30-ந் தேதி சர்வ அமாவாசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!