மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் – அரசு உத்தரவு!

0
மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் - அரசு உத்தரவு!
மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் - அரசு உத்தரவு!
மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் – அரசு உத்தரவு!

இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களில் முதல் மாநிலமாக முகக்கவசம் அணிவது உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கி மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்:

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத கடைசியில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் பாதுகாத்து வந்தனர். மேலும் இந்த நேரத்தில் மக்கள் வீட்டை வெளியே வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது தவிர திருவிழாக்கள், பொது கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என அனைத்தும் தடை இருந்தது. அதனால் மக்களும் அமைதி காத்து வந்தனர். அதன் பிறகு கொரோனா முதல் அலை ஓய்ந்து, 2வது அலை, 3 வது அலை, ஒமைக்ரான் பரவல் என அடுத்தடுத்து அலைகள் உருவாகி மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விடுமுறை தினங்களில் பொருட்கள் அனுப்ப தடை!

இந்நிலையில் தற்போது நாட்டிலேயே, கொரோனா பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், தற்போது, கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து விட்டது. இந்நிலையில், பொது இடங்களில் நாளை (ஏப்ரல் 2) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்து உள்ளது.

இது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியதாவது, குடி பட்வா என்பது புத்தாண்டின் ஆரம்பம். புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான நாள் இது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொடிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி வருகிறோம். இன்று அந்த துயரம் மறைந்து வருவதாகத் தெரிகிறது. ஒரு புதிய தொடக்கமாக, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமலில் இருந்த பேரிடர் மேலாண்மை சட்டம் விலக்கி கொள்ளப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளும், கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக இருந்தது போல் இயங்கலாம். மேலும், மாநிலத்தில் அனைத்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், மால்கள், மல்டிபிளக்ஸ்கள், உணவகங்கள் மற்றும் பார்கள், விளையாட்டு மைதானங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், ஆரோக்கிய மையங்கள், அழகு நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் எவ்வித கொரோனா கட்டுபாடின்றி 100 சதவீத திறனுடன் செயல்படலாம். அதேநேரம் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் முகக்கவசம் அணியலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!