TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

0
TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?
TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?
TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (குரூப்-4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு எதிர்வரும் 24.07.2022 முற்பகலில் நடைபெற உள்ளன. இந்நிலையில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

TNPSC Group 4:

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நடத்தப்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விட இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு அதிகமாக தேர்வர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.

மேலும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஓடிஆர் (OTR) கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் குரூப் 4 தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதாவது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளி, சுய பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தேர்வர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்:

  • முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி, தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும்.
  • தேர்வு எழுத வரும் நபர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்கு வந்துவிட வேண்டும்.
  • தேர்வு எழுத வரும் நபர்கள் காலை 9.00 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – நான்காம் அலை தொடக்கமா?

  • தேர்வு எழுத வரும் நபர்கள் கருப்பு பந்துமுனைப் பேனா (Black Ball Point Pen )-வினால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.
  • தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு அனுமதிச் சீட்டினை (Examination Hall Ticket) தவறாமல் கொண்டு வர வேண்டும்.
  • தேர்வு எழுத வரும் நபர்கள் அரசின் அனைத்து கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்
  • தேர்வுக்குப் பயன்படுத்தும் சொந்தப் பொருட்களை, மற்ற தேர்வர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
  • முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!