இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – நான்காம் அலை தொடக்கமா?

0
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - நான்காம் அலை தொடக்கமா?
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - நான்காம் அலை தொடக்கமா?
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – நான்காம் அலை தொடக்கமா?

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் கணிசமாக உயர்ந்து வருவதால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல்:

நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் எண்ணிலடங்காத உயிரிழப்புகளும் ஏற்பட்டது. மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கொரோனா பரவலை குறைப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மக்கள் வேலையின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவைகளை சந்திக்க நேரிட்டது. அதன் பிறகு அரசின் தீவிர முயற்சியாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. அதுமட்டுமின்றி தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் காரணமாக தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது.

Exams Daily Mobile App Download

கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர். இந்த நிலையில் கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. இரண்டாம் அலையின் போது உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் மிகவும் வீரியமுடன் பரவியது. இதனை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும்,முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டும், தொற்றானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் தடுப்பூசி கண்டுபிடிப்பு இத்தகைய சூழலில் வரப்பிரசாதமாக கருதப்பட்டது. இந்த நிலையில் குறைய தொடங்கிய கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நான்காம் அலை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் இடமாற்றம் – பின்னணி என்ன?

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் உயிரிழப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது. இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 03 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 2,603 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,388 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 18,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,32,140 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.47% ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,091 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here