TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வு எப்போது? முழு விவரம் வெளியீடு!

0
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - தேர்வு எப்போது? முழு விவரம் வெளியீடு!
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - தேர்வு எப்போது? முழு விவரம் வெளியீடு!
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வு எப்போது? முழு விவரம் வெளியீடு!

மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் ‘டெட்’ தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒன்றரை மாதங்கள் ஆகியும், தேர்வு தேதியை இன்னும் அறிவிக்காததால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிருப்தியில் தேர்வர்கள்:

இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் இதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. மேலும் கடைசியாக 2019-ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதால், அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியானது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிக்கை 07.03.2022 அன்று வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. இதற்கிடையே, பி.எட். இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (Diploma in Teacher Education) இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate-னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அறிவிப்பின்படி இத்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – 40 ரயில்கள் ரத்து! பொதுமக்கள் அவதி!

இதையடுத்து விண்ணப்ப பதிவு முடிந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தேர்வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக விண்ணப்பதார்கள் காத்து கொண்டு உள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும் தேர்வை விரைந்து நடத்தினால் மட்டுமே, விண்ணப்பித்து காத்திருக்கும் பட்டதாரிகள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வி ஆண்டிலேயே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர முடியும் என தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!