மத்திய அரசின் PM Kisan திட்டத்தில் நிதியுதவி பெற வேண்டுமா? விண்ணப்ப செயல்முறை & கடைசி தேதி!

0
மத்திய அரசின் PM Kisan திட்டத்தில் நிதியுதவி பெற வேண்டுமா? விண்ணப்ப செயல்முறை & கடைசி தேதி!
மத்திய அரசின் PM Kisan திட்டத்தில் நிதியுதவி பெற வேண்டுமா? விண்ணப்ப செயல்முறை & கடைசி தேதி!
மத்திய அரசின் PM Kisan திட்டத்தில் நிதியுதவி பெற வேண்டுமா? விண்ணப்ப செயல்முறை & கடைசி தேதி!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கான கட்டாய eKYC ஐ முடிப்பதற்கான காலக்கெடுவை மே 31, 2022 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பழைய திட்டமிடப்பட்ட காலக்கெடு மார்ச் 22, 2022 உடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

PM Kisan திட்டம்:

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது மத்திய அரசின் முயற்சியாகும். இது பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டு வருமான உதவியாக 6,000/ ஐ மூன்று சம தவணைகளில் வழங்குகிறது. மேலும் விவசாயிகள், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் (PM-KISAN) பணப் பலனைப் பெற தங்கள் KYC பணியை முடிக்க வேண்டும். மத்திய அரசு கட்டாய eKYC ஐ முடிப்பதற்கான காலக்கெடுவை மே 31, 2022 வரை நீட்டித்துள்ளது, பழைய திட்டமிடப்பட்ட காலக்கெடு மார்ச் 22, 2022 உடன் முடிவடைந்தது.

இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி 203% ஆக உயர்வு!

PMKISAN பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு அருகிலுள்ள CSC மையங்களுக்கு செல்ல வேண்டும். அனைத்து PM KISAN பயனாளிகளுக்கும் eKYC இன் காலக்கெடு 31 மே 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று PM Kisan அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. கட்டாய eKYC முடிந்த பிறகு, நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் குடும்பங்களும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதிப் பலனைப் பெறத் தகுதிபெறுவார்கள், நான்கு மாதங்களில் தலா ரூ.2000 வீதம் மூன்று சம தவணைகளில் செலுத்தப்படும்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தங்கள் ஆதார் எண்ணுடன் வழங்க வேண்டும், இதன் மூலம் திட்டத்தின் கீழ் நிதிப் பலனை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கிக் கணக்கு விவரங்கள் வழங்கப்படாவிட்டால் எந்தப் பலனும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Kisan e-KYC செயல்முறை:

  • முதலில் pmkisan.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அதில் ‘விவசாயிகள் பிரிவு’ என்பதன் கீழ் ‘eKYC’ என்பதைக் கிளிக் செய்யவும்.
Exams Daily Mobile App Download
  • பின்னர் ‘OTP Based Ekyc’ பிரிவின் கீழ் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, ‘Search’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • OTP ஐ உள்ளிடவும், உள்ளிட்ட விவரங்களை வெற்றிகரமாக சரிபார்த்தவுடன் eKYC முடிக்கப்படும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!