Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள பிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்யலாம். மேலும் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் வட்டி விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பிக்சட் டெபாசிட்:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வங்கிகளை விட அஞ்சலகங்கள் அதிக வட்டியை அளிக்கிறது. முதலீடு, சேமிப்பு, பிக்சட் டெபாசிட் & பென்ஷன் திட்டம் போன்று மக்கள் பயன்பெறும் பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. மேலும் 100% உங்கள் பணத்திற்கு பாதுகாப்பான திட்டம் என்பதால் நடுத்தர மக்கள் மத்தியில் எப்போதும் அஞ்சலகங்களில் சேமிக்க நினைக்கின்றனர்.
மத்திய அரசின் PM Kisan திட்டத்தில் நிதியுதவி பெற வேண்டுமா? விண்ணப்ப செயல்முறை & கடைசி தேதி!
மற்ற முதலீடு திட்டங்களை தொடர்ந்து FD எனப்படும் பிக்சட் டெபாசிட் சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் முதலீட்டை தொடங்கலாம். மேலும் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இதில் 7 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.50% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD முதலீட்டு திட்டங்களுக்கு 5.50% வட்டி வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதே போல 3 முதல் 5 வருட FD திட்டங்களுக்கு 6.70 சதவீத வட்டியும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் FD திட்டத்தில் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அஞ்சல் துறையின் புதிய விதிகளின் படி முதலீட்டாளர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி நேரடியாக அவர்களின் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைய நினைப்பவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக வழிமுறைகளை மேற்கொண்டு கணக்கு தொடங்கலாம்.