தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை எனவும் 6-முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என செய்தி பரவியது. அதற்கு 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கற்றல் அடைவுத் திறனை சோதிக்க தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

முக்கிய அறிவிப்பு:

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவிலிருந்து இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவியது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று 2020 ஜனவரி இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், 2020 மார்ச் 24 அன்று நாடு முழுவதும் பொது முடக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அந்தக் கல்வியாண்டின் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டதால், முழு ஆண்டு தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது. பின்பு பல்வேறு தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தரமான அரிசி வழங்க கோரிக்கை!

பின்னர் தமிழக அரசின் தீவிர ஆலோசனைக்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கின. அதே சமயம் கொரோனா உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் பரவத் தொடங்கியது. இதனால் பள்ளிகள் மீண்டும் நடப்பு ஆண்டு ஜனவரி 31 வரை மூடப்பட்டது. பின்பு இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன் பலனாக பிப்ரவரி 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் மே மாதம் நடக்கும் என்றும் அதற்கான அட்டவணைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதையடுத்து 10 முதல் 12ம் வகுப்புகளுக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு இன்னும் இரண்டு தினங்களில் முடிவடைகிறது.

இந்நிலையில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மே மாதம் தேர்வுகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெறுமா என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையே, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு தேர்வு கிடையாது என்ற தகவல்கள் வெளியானது. இதற்கு பள்ளிக்கல்வி துறை பதில் அளித்து செய்திக் குறிப்பு வெளியிட்டு உள்ளது. இதில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்ததுடன் கண்டிப்பாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!