
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல்…!! மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலானது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்ததை அடுத்து, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனையொட்டி, தற்போது தமிழ்நாட்டில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற மே மாதம் இதற்கான இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளரின் ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் கட்டணம்.. அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதி ..
மேலும், நகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள 133 இடங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் காலியாக உள்ள 315 இடங்கள் என மொத்தம் தமிழ்நாட்டில் 448 உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த இருப்பதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது என்றும், அங்கு எப்பொழுது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.























