
அன்னவாசல் ஒன்றிய அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – ₹15,700 முதல் ₹58,100 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் ஒன்றிய அலுவலகம் (Annavasal Panchayat Union) சார்பில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 பணியிடம் இற்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 13-11-2025.
காலிப்பணியிட விவரம்
| பதவி பெயர் | காலிப்பணியிடங்கள் |
|---|---|
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | 01 |
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
-
குறைந்தபட்ச வயது: 18 வயது
-
அதிகபட்ச வயது: 37 வயது
சம்பள விவரம்
அலுவலக உதவியாளர் – ₹15,700 முதல் ₹58,100 வரை
விண்ணப்பக் கட்டணம்
-
₹50/- DD
தேர்வு நடைமுறை
-
எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
-
விண்ணப்பப் படிவத்தை https://pudukkottai.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
-
தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (கல்வித் தகுதி, சாதி, பிறப்பு தேதி போன்றவை) சுய சான்றுடன் இணைக்கவும்.
-
10×4 அங்குலம் அளவிலான தபால் உறை மற்றும் முத்திரை ஒட்டிய முகவரி இணைக்கப்பட வேண்டும்.
-
முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பவும்.
-
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு தேதியும் இடமும் தபால் மூலம் அறிவிக்கப்படும்.
























