
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Research Scientist-I பணியிடங்கள் | மாத சம்பளம் ₹56,000 வரை | இப்போது விண்ணப்பியுங்கள்!
அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 02 Project Research Scientist-I பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 03 நவம்பர் 2025. இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான முழு தகவல்கள், தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்
மொத்தம் – 02 பணியிடங்கள்
கல்வித்தகுதி
பின்வரும் துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்:
-
M.E Medical Electronics
-
M.E Biomedical Engineering
-
M.Tech Pharmaceutical Engineering
-
M.E Communication Systems
-
M.E Applied Electronics
-
M.Sc Biochemistry (GATE / GPAT / CSIR-NET தகுதிகளுடன்)
Ph.D பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு
அதிகபட்சம் 35 வயது (அரசு விதிகளின்படி தளர்வு உண்டு).
சம்பளம்
₹56,000/- + HRA (திட்டத்தின் கால அளவுக்கேற்ப ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு நியமனம், பின்னர் நீட்டிக்கப்படும்.)
விண்ணப்பக் கட்டணம்
இந்த அண்ணா பல்கலைக்கழகம் Project Research Scientist-I ஆட்சேர்ப்புக்கு எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியலில் இடம் பெறுவார்கள், பின்னர் மின்னஞ்சல் மூலம் நேர்காணல் (Online/Offline) விவரங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் தங்கள் பூர்த்தியான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய கவர் லெட்டரை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
sreejaabs@gmail.com, sreejaabs@annauniv.edu
மின்னஞ்சல் தலைப்பில் “Application for ICMR project – Project Scientist – I” என்று குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03 நவம்பர் 2025

























