அரியர் தேர்ச்சி வழக்கில் நடைபெறும் இழுபறி – உயர்கல்வி, வேலை பாதிப்பு!!

0
அரியர் தேர்ச்சி வழக்கில் நடைபெறும் இழுபறி - உயர்கல்வி,வேலை பாதிப்பு 
அரியர் தேர்ச்சி வழக்கில் நடைபெறும் இழுபறி - உயர்கல்வி,வேலை பாதிப்பு 

அரியர் தேர்ச்சி வழக்கில் நடைபெறும் இழுபறி – உயர்கல்வி,வேலை பாதிப்பு 

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களின் அரியர் பாடங்களில் தேர்ச்சி வழங்குவதில் தொடரும் இழுபறி காரணமாக மாணவர்களின் வேலை மற்றும் உயர்கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து கொண்டே சென்றதால் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து அச்சம் ஏற்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள்

அரியர் விவகாரம் :

கொரானா காரணமாக தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இது பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிகளுக்கு முரணானது என இந்த அமைப்புகள் தெரிவித்தன.

மேலும் இது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டு பல நாட்கள் ஆகியும் எந்த தீர்ப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் பொறியியல் பயிலும் மாணவர்களை தவிர மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது.

உயர்கல்வி பாதிப்பு:

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் அறியார் வழக்கு இழுபறி காரணமாக மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் முதுநிலை பயில விரும்பும் மாணவர்களுக்கு தங்களது இளநிலை பட்டப்படிப்பு ஆவணங்களை கல்லூரி நிர்வாகங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.அனால் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் பட்டப்படிப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாததால் அவர்களின் உயர்கல்வி கேள்வி குறியாகியுள்ளது.

வேலை பாதிப்பு:

பொறியியல் இறுதி ஆண்டு முடித்து வேலை தேடும் மாணவர்களில் சிலர் அரியர் வைத்திருப்பதால் தங்களது தேர்ச்சி முடிவு தெரியாமல் வேலை தேடுவது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.தற்போது கொரானா காரணமாக பல ஊழியர்கள் வேலை இல்லமால் தவித்து வரும் நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு தற்போது இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்களது அரியர் தேர்ச்சி குறித்து விரைவில் தீர்ப்பு வழங்குமாறு மாணவர்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!