வாடிக்கையாளரின் ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் கட்டணம்.. அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதி ..

0
வாடிக்கையாளரின் ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் கட்டணம்.. அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதி ..
வாடிக்கையாளரின் ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் கட்டணம்.. அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதி ..

வாடிக்கையாளரின் ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் கட்டணம்.. அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதி ..

மக்கள் பொதுவாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் கட்டண செயலாக்கதிற்காக மின் வணிகம் தளங்களை உபயோகித்து வருகின்றனர். இதில் அமேசான், ஈபே, பேபால் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மக்களிடையே மிகவும் பரவலாக அறியப்பட்ட மின் வணிக நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் பரிவர்த்தனையை செயலாக்குவதற்கான செலவுகளை ஈடுகட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையானது வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த செயலாக்க கட்டணம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இன்னும் இணைக்கவில்லையா..?? கொஞ்சம் காத்திருக்காங்க.. பிரத்யேக செயலியை உருவாக்க போகும் மத்திய அரசு..

அதாவது, இந்த செயலாக்க கட்டணம் முன்னதாக ப்ளிப்கார்ட்டினால் நடைமுறைபடுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமேசானும் இந்த கட்டணத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனால், “வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ.500 வங்கி தள்ளுபடியுடன் ரூ.6,000 மதிப்புள்ள பொருளை வாங்கினால் இனி வாடிக்கையாளர்கள் ரூ.5,500க்கு பதிலாக ரூ.5,549 செலுத்த வேண்டும். இந்த செயலாக்க கட்டணம் ப்ரைம் உறுப்பினர்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும், ரூ.500 குறைவான வங்கி தள்ளுபடிகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அமேசான் வாடிக்கையாளர் உதவி மையத்தின் கூற்றின் படி, வாடிக்கையாளர்கள் ஆர்டரை ரத்துசெய்தலோ அல்லது பொருளை திருப்பி அனுப்பினலோ செயலாக்க கட்டணம் திருப்பி அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!