நாடு முழுவதும் ஏர்டெல் நெட்ஒர்க் சேவைகள் திடீர் பாதிப்பு – பயனர்கள் அவதி!

0
நாடு முழுவதும் ஏர்டெல் நெட்ஒர்க் சேவைகள் திடீர் பாதிப்பு - பயனர்கள் அவதி!
நாடு முழுவதும் ஏர்டெல் நெட்ஒர்க் சேவைகள் திடீர் பாதிப்பு - பயனர்கள் அவதி!
நாடு முழுவதும் ஏர்டெல் நெட்ஒர்க் சேவைகள் திடீர் பாதிப்பு – பயனர்கள் அவதி!

இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பாரத் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பயனர்கள் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏர்டெல்:

அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது தனிப்பட்ட வேலைகள் முதல் அலுவலக வேலைகள் வரை அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. அதனால் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில். பிரபல நெட்வொர்க் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நிறுவனங்கள் தங்களின் பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூன் 10ம் தேதி கடைசி நாள்!

தற்போது மீண்டும் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஏர்டெல் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் பயனர்களுக்கு டேட்டா, கால் அழைப்பு, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட எந்த சேவையும் கிடைக்கவில்லை இதனால் பயனர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் திடீரென 30 நிமிடங்கள் ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து பிற நெட்வொர்க்குக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை.

Exams Daily Mobile App Download

ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பி வந்தனர். இது தொடர்பாக ஏர்டெல் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதனால் பயனர்கள் குழப்பமடைந்தனர். பிறகு ஏர்டெல் நிறுவனம் சேவை பாதிப்பு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே சரிசெய்யப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமம் தற்போது சரி செய்யப்பட்டு தடையின்றி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!