இனி LPG கேஸ் சிலிண்டர் புக் பண்றது ரொம்ப ஈஸி – WhatsApp இருந்தா போதும்! முழு விபரம் இதோ!
இந்தியாவில் சிலிண்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது சிலிண்டர் முன்பதிவு செய்வது மிகவும் ஈஸியாகிவிட்டது. இப்போது வாட்ஸ் ஆப் மூலமாக பாரத் கேஸ் பாரத் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வது குறித்து பார்ப்போம்.
சிலிண்டர் முன்பதிவு:
இந்தியாவில் பெரும்பாலானோர் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து உஜ்வாலா யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுவதுடன் அரசு சார்பாக மானியத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் சிலிண்டருக்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
ஆனால் கொரோனா கால கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மானியத் தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.200 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தற்போது பெரும்பாலானோர் இரண்டு சிலிண்டர் வைத்திருக்கின்றனர். இதில் ஒன்று காலியாவதற்கு முன்பாக மற்றொரு சிலிண்டரை புக் செய்துவிடுவர். தற்போது சிலிண்டர் புக் செய்ய வாட்ஸ் ஆப் இருந்தால் மட்டுமே போதுமானது. அத்துடன் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு இந்தியன் ஆயில் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தனித்துவமான புக்கிங் நம்பர்கள் உள்ளன.

புக் செய்வதற்கான வழிமுறைகள்:
1. பாரத் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவர்கள் 1800224344 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்ய வேண்டும்.
2. இதையடுத்து வாட்ஸ் ஆப்பில் “hi” என்று அனுப்பியவுடன் பாரத் கேஸ் தொடர்பான சேவைகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
3. இதில் ‘book cylinder’ என்ற ஆப்சனை தேர்தெடுத்து ‘1’ என டைப் செய்து அனுப்ப வேண்டும்.
4. நீங்கள் புக் செய்தவுடன் உங்களுக்கு confirmed மெசேஜ் அனுப்பப்படும்.
5. இதையடுத்து மீண்டும் ’hi’ அனுப்பினால் பணம் செலுத்துவது குறித்து காண்பிக்கப்படும்.
6. இறுதியாக ‘2’ என டைப் செய்து அனுப்ப வேண்டும். மேலும் இது போன்ற சிலிண்டர் தொடர்பான சேவைகளை இந்த வாட்ஸ்அப் மூலமாக பெற முடியும்.