WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தவறாக அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம்!

0
WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி தவறாக அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம்!
WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி தவறாக அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம்!
WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தவறாக அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம்!

கடந்த சில மாதங்களாகவே வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து அப்டேட்கள் வந்தபடியே இருக்கிறது. தற்போது தவறாக அனுப்பப்பட்ட ஒரு குறுஞ்செய்தியை எடிட் செய்து கொள்ளும் படியான வசதி கூடிய விரைவில் அறிமுகமாக இருப்பதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

WhatsApp:

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்ஆப் செயலியில் அவ்வப்போது பல அப்டேட்கள் வந்தபடி இருக்கின்றன. சமீபத்தில் கூட வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு குறிப்பிட்ட குறுஞ்செய்திக்கு ரியாக்ட் செய்யும்படியான வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு சில அப்டேட்களை வழங்க வாட்ஸ்ஆப் நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனத்திலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சில நிறுவனங்களின் அப்டேட்டை வாட்ஸ்ஆப்பிற்கு கொடுத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இன்ஸ்டாகிராம் செயலியில் தான் அனுப்பப்பட்ட ஒரு செய்தியை முழுமையாக நீக்கும் படியான அப்டேட் வழங்கப்பட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வாட்ஸ்ஆப் செயலியிலும் இந்த அப்டேட்டை கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வாட்ஸ்ஆப் செயலி மூலமாக மற்றொரு நபருக்கு தவறாக ஏதேனும் தகவலை பகிர்ந்து விட்டால் அந்த தகவலை எடிட் செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. தவறாக அனுப்பப்பட்ட செய்தியை கிளிக் செய்வது எந்த தகவலை வழங்க வேண்டுமோ அதை எடிட் செய்து மீண்டும் அந்த நபர்களுக்கு அனுப்பலாம்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ஹேமாவிற்கு உண்மை தெரிந்ததை அறிந்த பாரதி!

ஆனால், இந்த எடிட் செய்யும் வசதி கொஞ்சம் காலத்திற்கு மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கு தவறாக அனுப்பப்பட்ட ஒரு செய்தியை Delete for everyone செய்வதற்குப் பதிலாக Delete for me செய்து விட்டாலும் அதனை எடிட் செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் செயலியை ஒருவரின் அனுமதியின்றி வேறு ஒரு மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய முடியாமல் பாதுகாக்கவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த இரண்டு அப்டேட்டும் வாட்ஸ்ஆப் செயலிக்கு வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!