விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ஹேமாவிற்கு உண்மை தெரிந்ததை அறிந்த பாரதி!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ஹேமாவிற்கு உண்மை தெரிந்ததை அறிந்த பாரதி!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ஹேமாவிற்கு உண்மை தெரிந்ததை அறிந்த பாரதி!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ஹேமாவிற்கு உண்மை தெரிந்ததை அறிந்த பாரதி!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவுக்கு தன்னுடைய அம்மா யாரென்று தெரிந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த பாரதி. இதனால் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியல்களில் அதிக விமர்சனங்களை பெற்று வரும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தொடர் தான் என்று சொல்லும் அளவுக்கு எபிசோடுகள் நகர்கிறது. சீரியல் தொடங்கிய காலத்தில் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே சென்ற காட்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று ரீச் ஆகியது. அதன் பிறகு சீரியலில் ஒரு லாஜிக்கே இல்லாமல் மறுபடியும் முதலில் இருந்தா என ரசிகர்கள் கடுப்பாகும் அளவுக்கு கதையை ஜவ்வாக இழுத்து வருகிறார் இயக்குனர்.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலை பொருத்தமட்டிலும் தான் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது? எப்படி? மீண்டும் இணைவார்கள் இது மட்டும் தான். ஆனால் அதை தவிர தேவையில்லாத எல்லா விஷயங்களும் இந்த சீரியலில் காட்டப்பட்டு மவுசு போச்சு என்றே ஒரு வார்த்தையில் சொல்லி முடித்து விடலாம். இப்படி இருக்கையில் தற்போது ஒரு பக்கம் தன் அப்பா பாரதி தன் என தெரிந்து கொண்டு லட்சுமியும், அம்மா யாருன்னே தெரியாம இருக்கும் ஹேமாவும் சேர்ந்து பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க பல திட்டங்கள் செய்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் விவாகரத்து வாங்கியே ஆவேன் என ஒத்த காலில் பாரதி நின்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா விவாகரத்து விஷயம் லட்சுமிக்கும் தெரிந்துவிடுவது போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் என்னடா அதிசயமா எதோ ட்விஸ்டுலாம் வைக்குறீங்க என ரசிகர்கள் வியந்து ஒரு வேலை சேர வாய்ப்புகள் இருக்குமோ ? என்ற எதிர்பார்ப்பில எபிசோடுக்காக காத்திருக்கின்றனர். அதாவது, அந்த ப்ரோமோவில் ஹேமா, பாரதியிடம் நீங்க யாருக்கு விவாகரத்து கொடுக்கப் போறீங்க? உங்கள் மனைவிக்கு தானே விவாகரத்து கொடுக்க போறீங்க. அப்படின்னா, அவங்க எங்க அம்மா தானே! என்று ஹேமா கேட்கிறார். இதை கேட்ட பாரதி அதிர்ச்சியில் உறைவது போல் நிற்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!