ஏப்ரல் 30 வரை விமான பயணங்கள் ரத்து – அதிர்ச்சியளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முடிவு..!

0
ஏப்ரல் 30 வரை விமான பயணங்கள் ரத்து
ஏப்ரல் 30 வரை விமான பயணங்கள் ரத்து

ஏப்ரல் 30 வரை விமான பயணங்கள் ரத்து – அதிர்ச்சியளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ரயில், விமானம் போன்ற அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30 வரை தனது சேவையை நிறுத்தி உள்ளது.

பணியிழந்த ஊழியர்கள்:

ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால் அகல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் ஏர் இந்தியா உட்பட பல நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்த ஊழியர்களை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.

நாளை ரேஷன் கடைகள் செயல்படாது – அப்போ 1000 ரூபாய் எப்படி கிடைக்கும்..? தமிழக அரசின் விளக்கம்..!

மேலும் குறிப்பிட்ட அளவு சம்பளமும் பிடித்து உள்ளனர். இந்திய ரயில்வே நிறுவவனமும், பல விமான நிறுவனங்களும் ஏப்ரல் 15ம் தேதி முதல் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு சேவையை தொடங்கி விட்டன.

ஏர் இந்தியா சேவை நிறுத்தம்:

ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30 வரை அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்தி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பிற நடவடிக்கைகள் ஊரடங்கு முடிந்த பிறகு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!