AIIMS-ல் Project Technical Support-II காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!
AIIMS-All India Institute of Medical Sciences ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Project Nurse-I, Project Technical Support-II மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Nurse-I, Project Technical Support-II மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BDS / BE / B.Tech / Diploma / DMLT / M.Sc / MBBS / MVSc / Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25, 30, 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IIT Madras-ல் Project Officer காலிப்பணியிடங்கள் – ரூ.1,50,000/- சம்பளம் || கடைசி வாய்ப்பு!
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு AIIMS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























