அரசு பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பு 40 ஆக உயர்வு – முதல்வர் பரிசீலனை!

0
அரசு பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பு 40 ஆக உயர்வு - முதல்வர் பரிசீலனை!
அரசு பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பு 40 ஆக உயர்வு - முதல்வர் பரிசீலனை!
அரசு பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பு 40 ஆக உயர்வு – முதல்வர் பரிசீலனை!

புதுச்சேரியில் அரசு பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டி கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேலும் இது குறித்து அளிக்கப்பட்ட மனுவை பெற்ற முதல்வர் வயது வரம்பு குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வயது வரம்பு:

நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் எப்படியாவது அரசு வேலை வாங்க வேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் உள்ளனர். அதிகரித்து வரும் மக்கள் தொகை, பட்டதாரிகளின் எண்ணிக்கை, இடஒதுக்கீடு போன்றவற்றால் அரசு வேலை கிடைப்பது அரிதான ஒன்றாகி விட்டது. அரசு வேலைக்காக காத்திருந்து வயதாகி விட்டது என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். அதாவது அரசு பணியில் சேர வயது வரம்பு உள்ளது. இது பொது பிரிவினருக்கும், மற்ற பிரிவினர்களுக்கு மாறுபடும்.

தமிழ்நாடு தபால் துறையில் 4310 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொது பிரிவினரை விட பட்டியலினத்தவர்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு. இந்த நிலையில் புதுவையில் அரசு பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டி கோரிக்கைகள் எழுந்துள்ளது. அங்கு அரசுத் துறை பணியிடங்களுக்கு சேர வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று சட்டசபையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் நிரப்பப்படாமல் உள்ள காலிபணியிடங்களால், பல கோப்புகள் தேக்கம் அடைந்துள்ளது. மக்களின் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலை சரி செய்ய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அரசு பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அரசுத்துறையில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!