விவகாரத்திற்கு பின் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நடிகை சமந்தா – ரசிகர்கள் ஷாக்!

0
விவகாரத்திற்கு பின் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நடிகை சமந்தா - ரசிகர்கள் ஷாக்!
விவகாரத்திற்கு பின் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நடிகை சமந்தா - ரசிகர்கள் ஷாக்!
விவகாரத்திற்கு பின் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நடிகை சமந்தா – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் திரைப்பட நடிகையான சமந்தா கணவர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தொகை ரூ.4 கோடி என்று சொல்லப்பட்டு வருகிறது.

நடிகையின் சம்பளம்

கிட்டத்தட்ட 10 ஆண்டுகால சினிமா பயணத்தில் தென் இந்திய திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகி என்ற இடத்தை பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட நடிகையான சமந்தா தனது திறமை மற்றும் முயற்சி காரணமாக தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு சாதாரண துணை நடிகையாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த சமந்தா தற்போது இந்திய மக்களின் ஆஸ்தான நாயகியாக மாறி இருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவிற்கு இன்று 29வது பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

சினிமா உலகில் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்பாக சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது 4 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்துள்ளார். இந்த விவாகரத்துக்கான உண்மை காரணங்கள் குறித்து நடிகை சமந்தா இதுவரை எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க, நடிகை சமந்தா மீண்டுமாக திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கிறார். இந்த முறை அவரது கவனம் எல்லாம் ஹிந்தி சினிமா பக்கம் திரும்பி இருக்கிறது. அதாவது ஹிந்தி மொழியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடரின் மூலம் ஹிந்தி சினிமாவுக்கு தாவி இருக்கும் நடிகை சமந்தாவின் கைவசம் சில திரைப்படங்கள் இருக்கின்றனவாம்.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவிற்கு இன்று 29வது பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

அதே போல தமிழிலும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாராவுடன் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஒரு திரைப்படத்துக்கு இவர் ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற நிர்ணயித்திருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!