6 மாதத்தில் 36 கிலோ எடையை குறைத்த சின்னத்திரை நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

0
6 மாதத்தில் 36 கிலோ எடையை குறைத்த சின்னத்திரை நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!
6 மாதத்தில் 36 கிலோ எடையை குறைத்த சின்னத்திரை நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!
6 மாதத்தில் 36 கிலோ எடையை குறைத்த சின்னத்திரை நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா சீரியலில் மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை கிருத்திகா லட்டு. இவர் தனது உடல் எடையை குறைத்தது குறித்து யூடூப் சேனலில் மனம் திறந்து பேசிய வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை கிருத்திகா:

ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில், ஹீரோயினின் அக்காவாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா லட்டு. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான அமானுஷ்ய மற்றும் மர்மங்கள் நிறைந்த பைரவி – ஆவிகளுக்கு பிரியமானவள் என்ற சீரியலில் நடித்துள்ளார். ராஜ் டிவி-யின் ஹலோ ஷியாமளா, பொன்னுஞ்சல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார். சென்னை 28 திரைப்படத்தின் செகண்ட் பார்ட்டான Chennai 28 2-வில் நடிகர் நிதின் சத்யாவின் மனைவியாக நடித்துள்ளார்.

பார்வதியை விக்கியிடம் இருந்து காப்பாற்றும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

இந்நிலையில் அவர் முன்னர் இருந்த புகைப்படம் மற்றும் தற்போது உள்ள புகைப்படத்தின் வேறுபாட்டை காட்டும் வகையில் இன்ஸ்டாவில் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் இவர் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பாக செம குண்டாக இருந்திருக்கிறார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கிருத்திகா தனது உருவமாற்றம் குறித்த ரகசியத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சிறு வயதில் இருந்தே அவர் குண்டாக இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் தனக்கு பிடித்த உடை எதுவும் அணிய முடியாமல் சிரமப்பட்டதாகவும், உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தன் மீதே தனக்கு ஏற்பட்ட கோபம் மற்றும் உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற வெறியே தனது இந்த ட்ரான்ஸ்பர்மேஷனுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். 70 கிலோ எடையில் இருந்த தான் திடீரென 99 கிலோ வரை பிரசவத்திற்கு பின்னர் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார். நிபுணரின் மேற்பார்வையில் சரியான டயட், திரவ உணவுமுறை எனப்படும் லிக்விட் டயட்டை பின்பற்றி சுமார் 37 கிலோ வரை உடல் எடையை 6 மாதத்திற்குள் குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதே போல இந்த டயட்டை பின்பற்றும் போது சுமார் 1 மாதம் வரை பெரிதாக எந்த ரிசல்ட்டும் தெரியவில்லை என்றும் ஆனால் டயட் நிபுணர் இதற்கு பொறுமை அவசியம் என்று கூறியதால் பின்னர் பொறுமையை வளர்த்து கொண்டதாகவும் நடிகை கிருத்திகா தெரிவித்து இருக்கிறார். லிக்விட் டயட்டுடன் கூடவே வாக்கிங், தோப்புகரணம் போன்ற பல சின்னச்சின்ன விஷயங்களை செய்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!