தவெக தலைவர் விஜயை ஆதரிக்கும் நடிகை கஸ்தூரி..!! அவரின் பேச்சால் வெடிக்கும் சர்ச்சை..!!
கடந்த 5 ம் தேதி விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுதிய “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்னும் நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட முன்னாள் நீதியரசர் சந்துரு பெற்றுக்கொண்டார். இவ்விழாவில், விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய உரை அரசியல் களத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி இது குறித்து முக்கிய கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது, “திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆதவ் அர்ஜுனா மற்றும் திருமாவளவன் விசிகவில் ஒன்றாக இருப்பார்களா என தெரியவில்லை.” மேலும் “உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே சனாதனம் மற்றும் ரஜினி பற்றி விமர்ச்சித்துள்ளார்” எனவும், “திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில் சக்கரை போடுவேன்” எனவும் நடிகை கஸ்தூரி விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்



























