‘வலிமை அப்டேட்’ – நடிகர் அஜித் ரசிகர்கள் உற்சாகம்!

0
இன்று மாலை 6 மணிக்கு 'வலிமை அப்டேட்' - நடிகர் அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
இன்று மாலை 6 மணிக்கு 'வலிமை அப்டேட்' - நடிகர் அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை அப்டேட்’ – நடிகர் அஜித் ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் அஜித் குமார் அவர்கள். அவரின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது அவரின் வலிமை படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் அந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை – புதிய தகவல்!

அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் வலிமை. அதாவது நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் மாதக்கணக்காக அந்த படத்திற்கான புதிய அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் ட்விட்டர் போன்ற பல சமூக வலைதளங்கள் வாயிலாக எங்கு பார்த்தாலும் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டுக் கொண்டிருந்தனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தந்தையின் உடல்நிலை கவலைக்கிடம் – ரசிகர்கள் சோகம்!

இந்நிலையில் அவர்களை குஷிப்படுத்த அந்த படத்தின் இயக்குனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதாவது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், வலிமை படத்தின் மோஷன் போஸ்டரும் இன்று வெளியாவது குறித்த செய்தியை அறிந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்உள்ளனர்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here