தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை – புதிய தகவல்!

2
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை - புதிய தகவல்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை - புதிய தகவல்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை – புதிய தகவல்!

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை தற்போது செயல்படுத்த வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிதி உதவி

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தமிழக மக்களுக்கு பல வகையான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ளதான திமுக அரசு, அறிவிக்கப்பட்ட படி பல நலத்திட்ட உதவிகளை நிறைவேற்றி வருகிறது. அதிலும் கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி – பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு!

இதற்கிடையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துதில் தற்போது கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 நிதி வழங்கும் திட்டமானது தற்போது துவங்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா நோய் தொற்று காலத்தில் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை கால தாமதமாக தொடங்க அரசு ஆலோசித்து வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகிறது.

சன் டிவி ரோஜா சீரியலில் இன்றைய எபிசோட் – தீ விபத்தில் தப்பிப்பார்களா அர்ஜுன் & ரோஜா!

இதற்கிடையில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பையும் தற்போது செயல்படுத்தாத காரணத்தால் தமிழக அரசு மீது பல கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ள படி, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here