சன் டிவி ரோஜா சீரியலில் இன்றைய எபிசோட் – தீ விபத்தில் தப்பிப்பார்களா அர்ஜுன் & ரோஜா!

0
சன் டிவி ரோஜா சீரியலில் இன்றைய எபிசோட் - தீ விபத்தில் தப்பிப்பார்களா அர்ஜுன் & ரோஜா!
சன் டிவி ரோஜா சீரியலில் இன்றைய எபிசோட் - தீ விபத்தில் தப்பிப்பார்களா அர்ஜுன் & ரோஜா!
சன் டிவி ரோஜா சீரியலில் இன்றைய எபிசோட் – தீ விபத்தில் தப்பிப்பார்களா அர்ஜுன் & ரோஜா!

சன் டிவியில் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் ரோஜா மற்றும் அர்ஜுன் ஆகிய கதாபாத்திரங்களை கருப்பொருள்களாக கொண்டு கதை போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பல பிரச்சனைகளுக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் முதல் இரவு ஏற்பாடு நடைபெறுகிறது. இதை தடுக்க பாட்டி மற்றும் அனு ஏதேனும் செய்வார்கள் என அர்ஜுன் சந்தேகப்படுகிறார்.

ரோஜா சீரியலில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பம் – அடுத்து நடக்கப்போவது என்ன?

ஒரு பரிகாரம் நிமித்தமாக கோவில் செல்கின்றனர் அர்ஜுன் மற்றும் ரோஜா. எதிர்பாராத விதமாக அங்கு வருகிறார் செண்பகம். அவரை யார் என்று தெரியாமல் ஆசீர்வாதம் வாங்குகிறார்கள் அர்ஜுன் மற்றும் ரோஜா. அதன் பிறகு அவர்களை அம்மன் சன்னதிக்கு வர சொல்கிறார் செண்பகம். ஆனால் அங்கு செண்பகம் வருவதற்கு முன்பே, அனு ரவுடிகள் உடன் வருவதை பார்த்த செண்பகம் அங்கிருந்து தப்பித்து சென்று விடுகிறார். அம்மன் சன்னதியில் செண்பகம் இல்லாததால் குழப்பத்தில் இருந்த அர்ஜுன் மற்றும் ரோஜாவிடம் பூசாரி, அம்மன் தான் அவரின் உருவில் வந்திருப்பதாக கூறுகிறார்.

இதையடுத்து தான் சிறையில் இருப்பது போல கனவு கண்டதை சொல்லி ரோஜா அர்ஜுனிடம் அழுகிறார். அவரை அர்ஜுன் சமாதானம் செய்கிறார். அடுத்ததாக நடக்க இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரோஜாவை அலங்கரிக்க கல்பனா கூட்டி செல்லும் போது, தானும் வருவதாக கூறி அனுவும் சேர்ந்து ரோஜாவுக்கு அலங்காரம் செய்கிறார். இந்நிலையில் அர்ஜுன் ரோஜாவிடம் இந்த முதலிரவு அறையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூற அந்த சமயத்தில் அங்கு வந்த அன்னபூரணி, அர்ஜுனை பார்த்து இங்கு என செய்கிறாய் என கேட்கிறார்.

தமிழகத்தில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி – பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு!

அதற்கு அர்ஜுன் இந்த அறையில் நீங்களும் அனுவும் சேர்ந்து கேமரா வைத்து இருக்கீங்களானு பார்த்துட்டு இருக்கேன் என கூறுகிறார். இதை கேட்ட அன்னபூரணி பாட்டி தான் மாறி விட்டதாக கூறுகிறார். அதை எதையும் அர்ஜுன் நம்பவில்லை. இந்நிலையில் மீண்டும் ரோஜாவின் அலங்காரத்தை ஆரம்பிக்கிறார் கல்பனா. அடுத்து பாட்டி கூப்பிடுவதாக கூறி ரோஜாவை தனியாக அர்ஜுன் அழைத்து வந்து ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். அந்த வேளையில் அறையின் வெளியே அனு ரிமோட்டை அமுக்கி அவர்களின் அறையில் தீ விபத்து ஏற்படுத்தி விடுகிறாள். இதன் மூலம் இதுவே அவளின் திட்டம் என தெரிகிறது. இதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here