தமிழகத்தில் ஆவின் பால் விலைகுறைப்பு – இன்று முதல் அமல்!!!

0
தமிழகத்தில் ஆவின் பால் விலைகுறைப்பு - இன்று முதல் அமல்!!!
தமிழகத்தில் ஆவின் பால் விலைகுறைப்பு - இன்று முதல் அமல்!!!
தமிழகத்தில் ஆவின் பால் விலைகுறைப்பு – இன்று முதல் அமல்!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆவின் பால் விலை குறைப்பு:

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாக கூறினார். அதன்படி, அவர் முதல்வராக பொறுப்பேற்றதும் 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். அதில், ஆவின் பால் விலைகுறைப்பும் ஒன்றாகும். அதன்படி, இத்திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் ரூ.2,000 நிவாரண நிதி – இன்றும் ரேஷன் கடைகளில் விநியோகம்!!

இதனால் ரூ.43 க்கு விற்கப்பட்ட 1 லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40 க்கும், ரூ. 21.50 காசுகளாக இருந்த அரை லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.20 க்கும் விற்கப்படும். அரை லிட்டர் 23 ரூபாயாக விற்கப்பட்ட மற்றொரு வகையான நிலைப்படுத்தப்பட்ட பால் , தற்போது 22 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் 24 ரூபாய்க்கும், இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.18.50 பைசாவுக்கும் விற்கப்படுகிறது. பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் தடையின்றி 24 மணி நேரமும் கிடைக்க வாடிக்கையாளர் சேவை மையம் ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!