ஆதார், பான் கார்டு இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!!

0
ஆதார், பான் கார்டு இணைப்பு - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதார், பான் கார்டு இணைப்பு - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதார், பான் கார்டு இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!!

மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது இன்னும் சில தினங்களில் அதற்கான காலஅவகாசம் முடியவுள்ளதால் இதனை மிக எளிமையாக இணைக்கும் வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

ஆதார் – பான் இணைப்பு:

தனிமனித அடையாள அட்டையாக கருதப்படுகிறது ஆதார் கார்டு. தற்போது நாட்டில் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை அனைத்து வேலைகளுக்கும் ஆதார் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் வருமான வரித்துறை ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. முதலில் இதற்காக கடந்த மார்ச் மாத 31ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கியது.

TN Job “FB  Group” Join Now

இதனை இணைக்கவில்லை என்றால் ரூ.10,000 வரை அபராதம் என்றும் பான் கார்டு முடக்கப்படும் என்றும் எச்சரித்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று பலர் இதனை இணைப்பதற்காக ஆன்லைனில் போட்டி போட்டு வந்தனர். இதனால் சர்வர் பிரச்னை உருவானது. இதனை கருத்தில் கொண்டு தற்போது ஆதார் மற்றும் பான் இணைப்பிற்கு கால அவகாசம் வருகிற ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான எளிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

ஆதார் பான் இணைப்பு வழிமுறைகள்:

  • அதிகாரபூர்வமான இணையதளமான https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற லின்கை கிளிக் செய்யவும்.
  • அதில் கேட்கப்படும் ஆதார் நம்பர், பான் நம்பர் மற்றும் ஆதாரில் இருக்கும் படியான பயனாளர்களின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும்.
  • பின்பு கேப்சா (Captcha) குறியீடு எண் அல்லது பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு OTPஐ பதிவு செய்ய வேண்டும். இதனை செய்தால் ஆதார் மற்றும் பான் இணைந்துவிடும்.

கொரோனா தொற்று முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் – உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்!!

  • அல்லது ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ள போன் நம்பரில் இருந்து 567678 அல்லது 56161 என்ற நம்பருக்கு ஆதார் மற்றும் பான் நம்பரை மெசேஜ் செய்ய வேண்டும். இதனை செய்தால் ஆதார் மற்றும் பான் இணைந்துவிடும்.
  • ஆதார் மற்றும் பான் இணைந்துவிட்டதா என்பதை அறிய https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்னும் லின்கை கிளிக் செய்யவும்.
  • அதில் பான் மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்து View Link Aadhaar Status என்பதை கிளிக் செய்தால் இணைப்பு குறித்த தகவல் தெரிந்துவிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!