மார்ச் 7 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

19 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

 • தமிழகம் முழுவதும் 19 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 • இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் முதல்முறையாக பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடக்கம்

 • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,070 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் பேர் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் முதல் அணியாக பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்.
 • இதற்காக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதக் கலவரம் பரவுவதை தடுக்க இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

 • இலங்கையில் மதக் கலவரம் பரவுவதை தடுக்க அந்நாடு முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

 • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு என ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன் பெறுவார்கள்.

மகளிர் தினம் முன்னிட்டு ரூ.8-க்கு சிறுநீரகப் பரிசோதனை: டெல்லியில் (08.03.2018)

 • உலக மகளிர் தினமும் உலக சிறுநீரக தினமும் ஒன்றாக இணைந்து வருவதை முன்னிட்டு டெல்லியில் இயங்கிவரும் லைப்லைன் ஆய்வகம் அனைவருக்கும் பயன்படும்வகையில் ஒரு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
 • மார்ச் 8 மகளிர்தினம் முன்னிட்டு ரூ.8க்கு சிறுநீரகப் பரிசோதனை செய்யப்படும். 08.03.201 காலை 10 முற்பகல் தொடங்கி மாலை 6 மணிவரை இவ்வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘நீட் தேர்வுக்கு ஆதார் எண் கேட்கக்கூடாது’’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

 • நீட் தேர்வு எழுதுபவர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தி கேட்கக்கூடாது என சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லெனின் சிலை உடைப்பு எதிரொலி

 • திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலையையும், வேலூரில் பெரியார் சிலையையும் பாஜகவினர் உடைத்தற்கு பதிலடியாக, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் பாஜக நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை உடைத்து முகத்தில் கறுப்பு மை பூசினர்.

உலகம்

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியல்: 

 • போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஹபீஸ் சயீதைக் கைது செய்ய லாகூர் உயர் நீதிமன்றம் தடை

 • ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீதை கைது செய்யக் கூடாது என்று லாகூர் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்குத் தடை விதித்துள்ளது.
 • 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி இவர் என்று அமெரிக்கா, ஐநா, இந்தியா ஆகிய நாடுகள் அறிவித்ததையடுத்து அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டனின் சாலிஸ்பரி நகர ஓட்டலில் ரஷ்ய உளவாளி மீது ரசாயன தாக்குதல்

 • ரஷ்ய ராணுவத்தில் மூத்த தளபதியாக பணியாற்றியவர் செர்ஜி ஸ்கேரிபால்.
 • பிரிட்டனின் சாலிஸ்பரி நகர ஓட்டலில் செர்ஜி ஸ்கேரிபால் மீது மர்ம ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது.
 • இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்ய உளவாளிகள் இருப்பதாக பிரிட்டிஷ் உளவு அமைப்புகள் சந்தேதகம் தெரிவித்துள்ளன. இதனை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் மறுத் துள்ளது.

வணிகம்

உயரதிகாரிகளுக்கு 19.3 லட்சம் பங்குகள் அளிப்பு: இன்ஃபோசிஸ் தகவல்

 • இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் முக்கியமான உயரதிகாரிகளுக்கு 19.3 லட்சம் பங்குகளை வழங்கி உள்ளது. புதிதாக பதவி ஏற்றிருக்கும் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கிற்கு 1.13 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டிருக்கிறது.
 • இதில் 84,768 பங்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்திக்கொள்ள முடியும். மீதமுள்ள 28,226 பங்குகளை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த தகவலை பிஎஸ்இ-க்கு இன்ஃபோசிஸ் தெரிவித்திருக்கி றது.

பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த டாடா மோட்டார்ஸ் இலக்கு

 • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
 • இதற்கேற்ப அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதை அதிகரிக்க உள்ளது.

விளையாட்டு

தாயகம் திரும்பிய கவுதம் கம்பீருக்கு புதிய பொறுப்பு

 • 2018 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து தாயகம் திரும்பிய கவுதம் கம்பீர் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி உரிமையாளர் கவுதம் கம்பீரை ரூ.2.8 கோடிக்கு ஏலம் எடுத்தார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!