தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை – முதல்வர் இன்று வெளியீடு!!
சட்டசபையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது போல் தமிழகத்தின் புதிய தொழில் கொள்கையை இன்று முதல்வர் பழனிச்சாமி அவர்கள் வெளியிடுகிறார்.
மாநில முன்னேற்றம்:
ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் அங்கு நிலவும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, புதிய தொழில்களுக்கான வாய்ப்பு, தொழில் தொடங்கும் விகிதம், தொழில்களுக்கான முதலீடு இவற்றை வைத்தும் கணக்கிடப்பப்படுகிறது. இதனால் தான் மாநில அரசுகள் தொழில்துறைக்கு அதிக முக்கிய துவம் அளிக்கிறது.
தமிழகத்தில் நர்சரி, பிரைமரி பள்ளிகள் திறப்பு – குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை!!
தமிழகத்தில் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்மையில் நடந்த ஆளுநர் உரையில் அரசு அறிவித்தது. இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்கையை முதல்வர் பழனிச்சாமி அவர்கள் இன்று வெளியிடுகிறார்.
எதிர்ப்பார்ப்பு:
முதல்வர் இன்று அறிவிக்க உள்ள புதிய தொழில் வளர்ச்சி கொள்கையில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பல திட்டங்கள் இருக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னையில் 10 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிற்பேட்டைகளையும் முதல்வர் தொடங்குகிறார். இன்று 28,053 கோடி ரூபாய் முதலீட்டில் 68,778 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 28 புதிய தொழில் திட்டங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்