போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி அறிவிப்பு ரத்து – மாநகராட்சி நிர்வாகம் முடிவு!!
பெங்களூரு மாநகராட்சி சார்பில் பட்டதாரி மாணவர்களுக்கான போட்டித்தேர்வு இலவச பயிற்சி மற்றும் 3 ஆண்டுகள் பட்டப்படிப்புகான பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அந்த அறிவிப்பை கைவிடவுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
போட்டித்தேர்வு இலவச பயிற்சி:
அரசு தேர்வுகளில் ஏழை எளிய மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மற்றும் 3 ஆண்டுகள் பட்டபடிப்புடன் வழங்கப்படும் என கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி பல மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். மாணவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் தகுதியான மாணவர்கள் பட்டியல் தயார் செய்திருக்க வேண்டும்.
அண்ணா பல்கலை எம்.டெக் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு – கே.பி.அன்பழகன் வலியுறுத்தல்!!
ஆனால் பெங்களூரு மாநகராட்சி இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால் மாணவர்கள் பலர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் எந்த பதிலும் கிடைக்காத நிலையில், பலரின் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டத்தை கைவிட திட்டமிட்டு உள்ளதாக பெங்களூரு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்